இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் மேலும் வலுப்படுத்தப்படும்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேலும் வலுப்படுத்தப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் பாம்பியோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, இரு நாடுகளின் வர்த்தகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அண்மையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, வர்த்தகத்தில் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் விரைவில் எடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியமைச்சர் ஜெயசங்கர், இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேலும் வலுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version