ஆசிய தடகள போட்டியில் 4வது இடத்தை பிடித்த இந்தியா

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியஷிப் போட்டியில் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களுடன் இந்தியா 4 வது இடத்தை பெற்றுள்ளது.

23வது ஆசிய தடகள விளையாட்டு போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் 4 நாட்கள் நடைபெற்றது. கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் நிறைவு நாளில் இந்தியா 3 தங்கம் 7 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை பிடித்துள்ளது. 11 தங்கம் உள்பட 22 பதக்கங்களுடன் பக்ரைன் முதலிடத்திலும், 10 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் சீனா 2வது இடத்திலும், 5 தங்கம் உள்பட 18 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. 2017 ஆம் ஆண்டு புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 12 தங்கத்துடன் 29 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version