பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை – 2-வது முறையாக வெற்றி!

தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை 2-வது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் PJ-10 திட்டத்தின் கீழ் ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது அதை 400 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தாக்கும் வகையில் டிஆர்டிஓ அதிகரித்துள்ளது.

பிரமோஸ் சூப்பர்சோனிக் சோதனை ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் நடத்தப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. நீர் மூழ்கிகள், கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையிலுள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவி தாக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில் 2-வது முறையாக பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக நிகழ்த்திய டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனை இந்தியாவிற்கு ஊக்கத்தை அளித்துள்ளதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version