இந்தியாவுக்கு உறுதுணையாக நிற்பதாக உலக நாடுகள் அறிவிப்பு

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவிற்கு துணையாக நிற்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதற்கு காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும், பாகிஸ்தான் மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் உலக நாடுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டம் வகுத்தது, வெடிப் பொருட்களை எல்லை வழியாக கடத்தி வந்தது ஆகியவற்றுக்கு அந்த நபர் மூளையாக செயல்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Exit mobile version