இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கியது

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி, தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் பேட்டியில் இந்தியாவுக்கு எதிராக முத்துசாமி விளையாடி வருகிறார்.

Exit mobile version