இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடக்கம்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர், 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2 வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்திய ரோஹித் ஷர்மா நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல பந்து வீச்சிலும் அஸ்வின், ஷமி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டூ பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்த வரை எல்கர் சிறப்பான விளையாடி வருகிறார். அதேபோல தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆல் ரவுண்டர் முத்துசாமியும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். மற்ற வீரர்களின் சொதப்பலான ஆட்டம் அந்த அணிக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்காவும் தீவிரம் காட்டி வருகின்றன.

Exit mobile version