காஷ்மீரில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிருமாறு, பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்குப் பிறகு, பொது அமைதியை ஏற்படுத்துவதற்காக தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைகளை தற்காலிகமாக மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஆரிஃப் ஆல்வி, இந்த சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் சரியாக பயன்படுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களின் வாயிலாக இந்தியா மீது பாகிஸ்தான் இளைஞர்கள் போர் தொடுக்க வேண்டும் என்றார். அதிபரின் இந்த கருத்து காஷ்மீரில் மேலும் வன்முறைகளை அதிகரிக்கவும், இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபட தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான, பாகிஸ்தான் அதிபரின் இந்த கருத்து, சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.