உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 264 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலக கோப்பை தொடரில் 44 ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

டாசில் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய இலங்கை அணியில், அஞ்சலோ மேத்யூஸ் சதம் அடித்து அசத்தினார். அவர் 113 ரன்களை எடுத்திருந்தபோது ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 264 ரன்களை எடுத்தது.

Exit mobile version