ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லவுள்ள 4 இந்தியர்களுக்கு, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சி அளிக்கவுள்ளது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள யூரி காகரின் பயிற்சி மையத்தில் 4 இந்தியர்களுக்கு வரும் நவம்பர் முதல் 15 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் 6 முதல் 8 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தியாவின் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் திட்டத்திற்காக இஸ்ரோவின் கிளை மாஸ்கோவில் அமைக்கப்படும். இதற்காக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான கிளவ்கோஸ்மோசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டம் 10 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றியடைந்தால் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு ஆட்களை அனுப்பிய நாடு என்கிற சாதனையை இந்தியா படைக்கும்.

Exit mobile version