பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. 

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கிமி பிரிவுகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இந்திய நிலைகளை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதன்பின்னர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version