இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்களின்படி புதிதாக 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 66 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல தொற்று பாதித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 624 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில் பாதிப்பை குறைக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் கொரோனா தொற்றில் இருந்து 1 கோடியே 39 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

தற்போது 25 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Exit mobile version