இந்திய அணி வெற்றிப்பெற 273 ரன்களை நிர்ணயித்ததுஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற 273 ரன்களை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே வலுவான நிலையில் ஆடி வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சதமடித்தார். கடந்த போட்டியில் சதமடித்த மற்றொரு ஆட்டக்காரர் ஹேண்ட்ஸ் கோம்ப் 52 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், சமி 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

Exit mobile version