இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒருநாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில் மற்றும் முன்ரோ முறையே 13,7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.கேப்டன் வில்லியம்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய ராஸ் டெய்லர், டாம் லதாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெய்லர் 93 ரன்களிலும், டாம் லதாம் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 49 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார்,பாண்டியா, சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது.