கர்நாடகாவில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் முதல் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரசால், இதுவரை 110க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 4600 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தநிலையில், சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய, கர்நாடக மாநிலம் குல்பர்கியை சேர்ந்த 76 வயது முதியவரான முகமது உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உயிரிழந்துவிட்டநிலையில், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி!!!
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: #coronaindia#CoronavirusPandemic#COVID19
Related Content
சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
By
Web Team
January 26, 2023
ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை
By
Web Team
February 5, 2022
கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்
By
Web Team
February 5, 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு
By
Web Team
February 4, 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேருக்கு கொரோனா பாதிப்பு
By
Web Team
February 2, 2022