புத்தக தயாரிப்பு துறையில் உலகிலேயே இந்தியா 6வது இடம் வகிப்பதாகவும், ஆங்கில புத்தகம் தயாரிப்பதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இந்தியா உள்ளதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சென்னை பிரிண்டர்ஸ் மற்றும் லித்தோ கிராஃபர்ஸ் அசோசியேஷன் சார்பில் அச்சு இயந்திரங்களின் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகிலேயே புத்தக தயாரிப்பு துறையில் இந்தியா 6வது இடம் வகிப்பதாகவும், ஆங்கில புத்தகம் தயாரிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2வது இடம் வகிப்பதாகவும் ஆளுநர் கூறினார். அச்சு துறையில் இந்தியா உலகளவில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.