கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவித மதக் கலவரங்கள் இன்றி நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் அதற்கு காரணம் பாஜக தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்து சென்றுள்ளார் என்பதையும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகம் வந்தார் என்பதையும் கணக்கிட்டு பார்க்க வேண்டும் என கூறினார்.