ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா 2 வது இடத்தில் நீடிப்பு

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தர வரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்,121 புள்ளிகளுடன் இந்திய அணி 2 வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 113 புள்ளிகளுடன் நியூஸிலாந்து 3 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி ஒரு இடம் சரிந்து 100 புள்ளிகளுடன் 6 இடத்தில் உள்ளது.

Exit mobile version