உலகளவில் தினசரி கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக 31 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 20 ஆயிரத்து 740 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 973 பேர் பலியாகியுள்ளனர்.

நாடுமுழுவதும் புதிதாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 790 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது.

ஒரே நாளில், 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாகவும், 22 லட்சத்து 28 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் 90.8 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு 9.84 சதவீதமாகவும் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில, 11 ஆயிரத்து 968 பேர் பலியாகியுள்ளனர். உலகளவில் தினசரி தொற்று அதிகமாக பாதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Exit mobile version