உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு – மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்!

சமூக பரவலுக்கான நிலையான வரையறையை உலக சுகாதார நிறுவனம் வகுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண், 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருவாரியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் நிவேதிதா குப்தா, இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா, டெல்லியில் கடந்த 8ம் தேதி வரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 831 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தினமும் 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version