பொருளாதார வளர்ச்சியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா விளங்கி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையேயான விரிவான பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளுடன், சோவியத் காலகட்டத்தில் இருந்தே இந்தியா நட்புறவை வைத்து வருவதாக தெரிவித்தார். இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான காலம் வந்துள்ளதாகவும், உலக அரங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.