சீனாவுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வரும் நாடு

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்தை எட்டியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என கூறப்பட்டது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்து உள்ளது.

இது, கடந்த மூன்று காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச அளவாகும். ஆனால், சீனாவுடன் ஒப்பிடும்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version