இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 60.73 சதவீதத்தினர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது, 2 லட்சத்து 27 ஆயிரத்து 439 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 3 லட்சத்து 79ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களை விட, ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என குறிப்பிட்டு, மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கையால், பரிசோதனை எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 93 லட்சம் பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.