இந்தியா 0.8 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பை உருவாக்கியுள்ளது : பிரதமர் மோடி

இந்தியா மட்டும்தான் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 0. 8 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பை புதிதாக உருவாக்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் வனப்பரப்பை அதிகரிக்க முக்கியத்துவம் பற்றியும் பேசினார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்து விட்டதாக கூறிய பிரதமர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை உலகமே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டால், அதை விட அதிகப்படியான மரங்கள் நடப்படுவதை இந்தியா வழக்கமாக்கிக் கொண்டிருப்பதாக கூறினார். தட்ப வெப்ப நிலை மாறுபாட்டில் இருந்து உலகை காப்பாற்ற அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version