14 மில்லியன் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்கிறது இந்தியா!

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை முதற்கட்டமாக 13 நாடுகளுக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.  கொரோனா வைரஸால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், முதற்கட்டமாக 13 நாடுகளுக்கு 14 மில்லியன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Exit mobile version