தரமற்ற 50,000 மருத்துவ பாதுக்காப்பு உடைகளை சீனாவுக்கு திருப்பி இந்தியா அனுப்ப முடிவு!!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட PPE எனப்படும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளில் தரமற்றவற்றை திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

சீனாவிடமிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் மருத்துவ பாதுகாப்பு உடைகளை இந்தியா வாங்கியது. இதில் 50 ஆயிரம் பாதுக்காப்பு உடைகள், தரக்காட்டுப்பாட்டு சோதனையில் தேர்ச்சி பெறவில்லை. இதை அடுத்து தரமற்றவற்றை சீனாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் குறித்து பேசிய டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், ஏற்றுமதி துறையில், சீன அரசு கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீன அரசிடம் இறக்குமதி தேவையை தெரிவிக்கும் போது, அவர்களுக்கு சீன அரசு தரமான நிறுவனங்களின் பெயர்களை பரிந்துரைக்கிறது என்றும் அந்த பரிந்துரையின் படியே அனைத்து நாடுகளும் செயல்படும் என சீன அரசு நம்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தரமற்ற உடைகளை ஏற்றுமதி செய்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version