இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 69 லட்சத்தைக் கடந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 3 ஆயிரத்து 511 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 592 பேரும், கர்நாடகாவில் 529 பேரும் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் 404 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 19 கோடியே 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version