இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும், இறப்பு எண்ணிக்கை பொதுமக்களை அச்சுமூட்டும் வகையில் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 386 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 9 புள்ளி 26 சதவீதமாக உள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 733 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 975ஆக அதிகரித்துள்ளது.
கேளராவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் கூடுதலாக ஆயிரத்து 63 பேர் உயிரிழந்ததாக சேர்க்கப்பட்டதால், இறப்பு எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்த 16 லட்சத்து 21 ஆயிரத்து 603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.