இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரொனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. கொரொனா வைரஸ் பரவல் எதிரொலியாக அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்கள் பயன்படுத்தும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை உபயோகிக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் டெல்லி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

Exit mobile version