இந்திய எல்லையில், சீனா தொடர்ந்து ராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்களை மேம்படுத்தி வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லாடக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், கடந்தாண்டு எல்லை தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், எல்லைப் பிரச்னை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் உயர்மட்ட அளவிலான ஆலோசனை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் சீனா தொடர்ந்து ராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்களை மேம்படுத்தி வருவதாக, உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வடக்கில் கரகோரம் கணவாய்க்கு அருகில், WAHAB ZILGA பகுதியில் சீனா இந்த ராணுவ நிலைகளை அமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
எல்லை பிரச்னைக்கு சீனாவின் தன்னிச்சையான செயலே காரணம் என மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டிய நிலையில், சீனாவின் இந்த செயல் கிழக்கு லடாக் எல்லையில் அமைதி குலைந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.