இந்தியா – சீனப் படைகளுக்கு இடையே எல்லையில் மோதல்

லடாக் எல்லை அருகே இந்திய சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

பாங்- காங் த்சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை எதிர்கொண்ட சீன ராணுவத்தினர் இப்பகுதி தங்களுக்கு சொந்தம் என கூறி தடை விதித்தனர். இதற்கு இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எல்லைப் பிரச்சினை தலைதூக்கியது. இதனையடுத்து, பிரிகேடியர் மட்டத்திலான ராணுவ உயரதிகாரிகள் எல்லையில் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வரும் போது அருணாசலப்பிரதேச்தில் இந்திய படைகள் போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதுவும் இருநாட்டு எல்லைப் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

Exit mobile version