இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து: அமெரிக்க அரசிற்கு, அந்நாட்டு எம்.பி.,க்கள் கடிதம்

இந்தியாவிற்கு, மீண்டும் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அரசிற்கு, அந்நாட்டு எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்…

வளரும் நாடுகள், பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, வர்த்தக முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்திய சந்தையை அமெரிக்கா எளிதாக அணுகுவது குறித்து அந்நாடு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை எனக்கூறி, வர்த்தக முன்னுரிமை சலுகையை டிரம்ப் ரத்து செய்தார்.

இதற்கு, இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை, மீண்டும் அளிக்க வேண்டும் என அந்நாட்டு எம்.பி.,க்கள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிஜருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் வர்த்தக விவகாரத்தில், அமெரிக்க அரசு, இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம், தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளை தீர்க்க புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், இந்திய சந்தையை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறினார்.

Exit mobile version