மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் இன்று இந்தியா வந்தார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து, பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பிரேசில் உற்ற துணையாக உள்ளதாக கூறினார்.