இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை தொடரின் 40 வது லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் 40 வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பலம் வாய்ந்த இந்திய அணி மஷ்ரஃபி மோர்தஸா தலைமையிலான வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, ஒரு ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 5 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல், 7 போட்டியில் விளையாடியுள்ள வங்கதேசம் 3 வெற்றி 3 தோல்விகளை பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி மழையால் ரத்தானது.

அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிய நிலையில், இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, இப்போட்டியில் வெற்றி பெற்று 2 வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், வங்கதேசமும் அரையிறுதி வாய்ப்பில் நீடிப்பதால் இப்போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி பெர்மிங்காமில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையே, தமிழக வீரர் விஜய் சங்கர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

Exit mobile version