இந்திய – சீனா எல்லைப் பிரச்சினையை இருநாடுகளும் பேசி தீர்க்கும் – அனுராக் ஸ்ரீவஸ்தவா!!

லடாக் எல்லையில் சீனா தமது படைகளை குவித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்சனையை அமைதியான முறையில் பேசி தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இரு நாடுகளும் ராஜாங்க ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எல்லையையும் ஒற்றுமையையும் காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் விளக்கம் அளித்தார். இந்திய வெளியுறவுத்துறையின் இந்த பதிலின் மூலம் டிரம்பின் மத்தியஸ்தம் தேவையற்றது என்பது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version