இலங்கையின் இலவச விசா திட்டத்தில் இந்தியா, சீனா நாடுகள் சேர்ப்பு

இலங்கைக்கு சென்ற பிறகு இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் இலங்கை அரசு சேர்த்துள்ளது. தாய்லாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கம்போடியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சென்ற பிறகு விமான நிலையத்தில் இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்தி வந்தது. உலகை உலுக்கிய ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இலவச விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு கைவிட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்தது.

தற்போது சுற்றுலா பயணிகளின் வருகையை மீண்டும் அதிகரிக்கும் நோக்கில் மீண்டும் 39 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பிறகு இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா நாடுகளை சேர்ந்தவர்களும் கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை சென்ற பிறகு இலவசமாக விசா பெற்றுக் கொள்ள முடியும்.

Exit mobile version