ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 250 ரன்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் புஜாரா அதிகபட்சமாக 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Exit mobile version