இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சம்செளதா ரயில் சேவை இன்று தொடக்கம்

எல்லையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சம்செளதா ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய விமானத் தாக்குதலை தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதி லாகூர் முதல் டெல்லி வரையிலான சம்செளதா ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு நிறுத்தியது. தொடர்ந்து இந்தியாவும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சம்செளதா ரயில் சேவையை நிறுத்தியது. விமானப்படை அதிகாரி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, எல்லையில் பதற்றம் தணிந்ததால் மீண்டும் இன்று முதல் சம்செளதா ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

Exit mobile version