தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். திருவள்ளூர் மக்களவை தனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றிசெல்வி, ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மன்சூர் அலிகான் தேர்தல் அதிகாரி வினையிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சை வேட்பாளர்கள் திருஞானசம்பந்தம் மற்றும் ரவி ஆகியோர் தேர்தல் அலுவலர் முருகதாசிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Exit mobile version