சுதந்திர தினவிழாவையொட்டி புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களின் சோதனை நடைபெற்றது. மேலும் மாநில எல்லைகளில் தீவிர சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.