அட்டாரி – வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான அட்டாரி – வாகா பகுதியில் இந்தியர்கள் ஒருநாள் முன்கூட்டியே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு, பல்வேறு இடங்களில் மெழுவர்த்தி ஏந்தியும், மலர்கள் தூவியும் மக்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைப்பெறுகிறது. இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியது. ஆகஸ்ட் 14-ம் தேதியான நேற்று மாலை பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்து, அந்நாட்டு தேசியக்கொடி இறக்கப்பட்ட பிறகு, அங்கு கூடியிருந்த ஏராளமான இந்தியர்கள், இந்திய தேசியக் கொடியை ஏற்றி ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version