19வயதிற்கு உட்பட்டவர்களுக்கான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி!

பெண்களுக்கான முதலாவது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணி தனது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்தது.

டாப் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (4), லிபர்ட்டி ஹீப் (0), நியாம் பியோனா ஹாலண்ட் (10), செரன் ஸ்மால் (3) ஆகியோர்  சொற்ப ரன்களில் வெளியேறினர். 17.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 68 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி  69 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்தியது. இந்திய மகளிர் அணி 14 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்துவிட்டது. கேப்டன் ஷஃபாலி வர்மா 15 ரன்களுடனும், ஸ்வேதா செஹ்ராவத் 5 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். 3 பவுண்டரிகளை ஓட விட்ட கோங்காடி த்ரிஷா 24 ரன்கள் எடுத்தார். அவருடன் சிறப்பான ஜோடியை அமைத்த ரிச்சா கோஷ் 24 ரன்கள் எடுத்து அணியினை வெற்றிப்பாதைக்குள் செலுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி நடத்திய முதலாவது 19வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் இருபது ஓவர் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று உலகசாதனை படைத்துள்ளது. இதனையொட்டி அணியின் ஒவ்வொரு வீராங்கனை மற்றும் ஊழியர்களுக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐந்து கோடி ரூபாய் பரிசித்தொகையினை அறிவித்துள்ளார்.

Exit mobile version