நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகளவில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் 3 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. காற்றின் வேகம் அதிகரிக்கும் சமயங்களில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகரிக்கிறது.

தற்போது கேரளாவின் பெய்து வரும் மழையின் காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவில் காற்று வீசி வருகிறது. இதனால், நெல்லை மாவட்டங்களில் காவல்கிணறு, முப்பந்தல், அஞ்சுகிராமம், இருக்கன்துறை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

Exit mobile version