கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ளது கெலவரப்பள்ளி அணை. தற்போது இந்த பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணையின் முழுக்கொள்ளவான 44.28 அடியில், 41.98 கன அடி நீர் நிரம்பி உள்ளது. மேலும், அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு கருதி, 560 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவிலிருந்து வெளிவரும் தண்ணீரில், தனியார் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால், தண்ணீர் கருமையான நிறத்தில் வெளியேறி வருகிறது.