ஈரோடு அருகே உள்ள தலக்காடு ஆற்றுப்படுகைக்கு, நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்துடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லை பகுதியான தாளவாடியில் உள்ள தலக்காடு காவிரி ஆற்று படுகை, சுற்றுலா தலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், பரவலாக பெய்த மழையால் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதனையடுத்து, தலக்காடு ஆற்றுப்படுகைக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கபட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால், குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள், ஆற்று நீரில் குளித்து மகிழ்கின்றனர்.