உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை பாலாற்றின் வழியாக வந்து, உடுமலை அருகேயுள்ள பஞ்சலிங்க அருவியில் நீர்வீழ்ச்சியாக ஆர்ப்பரிக்கிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அருவிக்கு அருகில் இருக்கும், அமணலிங்கேஸ்வரர் கோயில், சுப்பிரமணியர் கோயில், திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள படகுத் துறையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Exit mobile version