உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் நம்மை அறியாமல், இந்தியா எதிர்காலத்தில் ஒரு பெரிய பொருளாதார ஆபத்தை நோக்கி செல்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறுக்குமதியின் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 85% கச்சா எண்ணெய் இறுக்குமதியையே நம்பி இருக்கிறது. அதற்காக இந்தியா 5 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்து வருகிறது.
இனி வரும் காலங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுவதால், இந்திய அரசும் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக இந்தியாவும் இன்னும் பல லட்சம் கோடி ரூபாய் செலவிட அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால், தற்போது தேவையில் இருக்கும் 217 மில்லியன் டன் கச்சா எண்ணெயின் தேவை, இன்னும் 61% உயர்ந்து 350 மில்லியன் டன்களாக மாறும். இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, தற்போது இந்திய அரசு கடும் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, எலக்ட்ரிக், எத்தனால், மெத்தனால் ஆகிய எரிபொருள் மூலம் இயங்கும் வானங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த வகையான வானங்களை மக்கள் வாங்க மானியமும் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், இதன் மூலம் காற்று மாசுபாட்டை தவிர்க்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெயின் இறக்குமதியை குறைக்க மக்களிடமும் விழிப்புர்ணவு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் எலக்ட்ரிக், எத்தனால், மெத்தனால் ஆகிய எரிபொருள் மூலம் இயங்கும் வானங்களை மக்கள் வாங்கவும் ஊக்குவிக்க மத்திய அரசு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. மக்களும் நாட்டின் நாளையை எரிபொருள் தேவை, காற்று மாசுபடுதல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அரசிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆராய்ச்சி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.