விழுப்புரத்தில், கடந்த இரண்டு நாட்களில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு தோராயமாக 600 பேர் வரை பாதிக்கப்படும் நிலையில், மருத்துவமனைகளில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 36 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 26 பேர் கொரோனாவால் இறந்திருப்பது, பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்