இன்றைய தலைமுறையினர் கடந்த தலைமுறையைக் காட்டிலும் அதிக அளவில் சம்பாதிக்கின்றனர். அதேபோல முதலீடு என்று வரும்பொழுது கடந்த தலைமுறையைக் காட்டிலும் அதிக விழிப்புணர்வு தற்போது இருக்கும் இளைஞர்களிடையே இருக்கிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் மற்ற மாநிலங்களை தமிழகத்தில் இருந்து அதிக அளவில் ஆயுள் காப்பீட்டை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீடு புதிய வணிகம் மூலம் தமிழ்நாட்டில் 14,581 கோடி பிரீமியம் வசூல் ஆகி இருக்கிறது .இது ஒட்டு மொத்த இந்தியாவில் வசூலான பிரீமியத்தில் 8 சதவீதம் ஆகும். இதே காலகட்டத்தில், சில்லறை பாலிசி பிரிவில் 6,448 கோடி பிரீமியம் வசூல் ஆகி இருக்கிறது. இது ஒட்டு மொத்த இந்தியாவில் வசூலான பிரீமியத்தில் கிட்டத்தட்ட 7 சதவீதம் ஆகும் இதே காலத்தில் ரீடைல் மூலம் கிடைத்த பிரீமியம் தமிழகத்தில் 16 சதவீதம் வளர்ச்சி உயர்ந்துள்ளது. இந்திய அளவில் பத்தாயிரம் பேரில் 210 பேர் மட்டுமே ஆயுள் காப்பீடு பாலிசிகள் எடுத்திருக்கும் நிலையில் தமிழகத்தில் 227 பேர் பாலிசி எடுத்து இருக்கிறார்கள். இது தமிழகத்தில் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
மேலும் கடந்த சில மாதங்களில் ஆயுள் காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத காலங்களை விட தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.