செடி முருங்கைக்கு கொள்முதல் நிலையம் அமைத்துத்தர வேண்டும் என அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடையார்பாளையம் பகுதியில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக, விவசாயிகள் செடி முருங்கையை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 10 லட்சம் முருங்கைக் காய்கள் அறுவடை செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முருங்கைக்கு, இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க, தமிழக அரசே நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.