பாலீதீன் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் தற்போது பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை அமலில் உள்ள நிலையில் தற்போது பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம், வேம்பார் சுற்றுவட்டார பகுதிகளில் பனை ஒலையில் வண்ண வண்ண பெட்டிகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாலீதின் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தாங்கள் செய்யும் பனை ஓலை பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், விலை கூடியிருப்பதாகவும் பனை ஓலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.